"சென்னை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்கும் முதல்வர் விஜய்!": ரூ.13,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம் - மெட்ரோ ரயிலில் பயணம்! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 11) சென்னை வருகை தருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவரைத் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் நேரில் சென்று வரவேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரதமரின் இன்றைய அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடியின் சென்னை பயணச் சுருக்கம்:
விமான நிலையத்தில் வரவேற்பு: தில்லியிலிருந்து இன்று காலை 11.30 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் முதல்வர் விஜய் நேரில் வரவேற்கிறார்.

மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் & பயணம்: ரூ.4,900 கோடி செலவில் முடிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், போரூர் புறவழிச்சாலை நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை மெட்ரோ ரயிலில் பிரதமர் பயணம் செய்யவுள்ள நிலையில், இவற்றுடன் முதல்வர் விஜய்யும் உடன் பயணிக்கிறார்.

ஐஐடி சென்னை (IIT Madras) நிகழ்வுகள்: நண்பகல் 12.15 மணிக்குச் சென்னை ஐஐடிக்கு வரும் பிரதமர், அங்கே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்கிறார். தொடர்ந்து, சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடுகிறார்.

ரூ.13,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிற்பகல் 1.30 மணியளவில் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில், ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களைத் நாட்டுக்கு அர்ப்பணித்தும் பிரதமர் உரையாற்றுகிறார். இந்த முக்கிய நிகழ்விலும் முதல்வர் விஜய் கலந்துகொள்கிறார்.

பள்ளிப் பொன்விழா: பின்னர் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டங்களிலும் பிரதமர் பங்கேற்கிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi Chennai Visit CM Vijay to Receive Prime Minister at Airport and Jointly Inaugurate 4900 Cr Metro Line


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->