"பிரதமர் மோடி சென்னை வருகை!": முதல்வர் விஜய் நேரில் வரவேற்பு - விமான நிலையம் முதல் பரங்கிமலை வரை உற்சாக வரவேற்பு ரோடுஷோ! - Seithipunal
Seithipunal


டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, சென்னை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பளித்தார்.

தலைவர்கள் வரவேற்பு: விமான நிலையத்தில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய்யுடன் இணைந்து, ஆளுநர் ஆர்.என். அர்லேகர், தலைமைச் செயலாளர் சாய்குமார், காவல்துறை டி.ஜி.பி. மகேஷ்குமார் மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர்கள் நேரில் வரவேற்றனர்.

பிரம்மாண்ட ரோடுஷோ: விமான நிலைய வரவேற்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி காரில் போரூர் நோக்கிப் புறப்பட்டார். விமான நிலையம் முன்பிருந்து பரங்கிமலை ராணுவ பயிற்சி வளாகம் வரை நடைபெற்ற ரோடுஷோவின் போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவியும், கொடிக்கொடிகளாக ஆரவாரம் செய்தும் வரவேற்பு அளித்தனர். அவர்களுக்குப் பிரதமர் மோடி உற்சாகமாகக் கையசைத்து நன்றி தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் சேவைத் தொடக்கம்: இதனையடுத்து, ரூ.4,900 கோடி செலவில் முடிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி இடையிலான 14.64 கி.மீ. வழித்தடப் பணிகளை முதல்வர் விஜய் முன்னிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்துத் தொடங்கி வைக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi Arrives in Chennai Warm Reception by CM Vijay and Roadshow Progress


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->