பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்! முதல்வரின் சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்து!
cm vijay wish world girl child day
தமிழக முதலவர் ஜோசப் விஜய் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பெண் குழந்தைகளைக் கொண்டாடி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் (UNICEF) சர்வதேச பெண் குழந்தை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், பெண் குழந்தைகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்! அவர்களின் மழலைச் சிரிப்பு, குடும்பத்தின் மகிழ்ச்சி! அவர்களின் துள்ளல், இயற்கையின் பேரழகு! ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது, அங்கே அன்பும், கருணையும், அளவிட முடியாத ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன.
பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமையும், பொறுப்புமாகும். பெண் குழந்தைகளின் கனவுகளுக்குச் சிறகளித்து, முன்னேற்றத்திற்குத் துணை நின்று, பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்!
English Summary
cm vijay wish world girl child day