‘ஜெயிலர் 2’ படத்தில் ஹிருத்திக் ரோஷன் கேமியோ?ஜெயிலர் 2-வில் செம மாஸ் கேமியோ வெயிட்டிங்...! ரசிகர்கள் உற்சாகம்! - Seithipunal
Seithipunal


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்களின்படி, முதலில் இந்த சிறப்பு கதாபாத்திரத்திற்காக நடிகர் ஷாருக்கானை படக்குழு அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அது சாத்தியமாகாத நிலையில், தற்போது ஹிருத்திக் ரோஷன் இந்த வேடத்தில் நடிக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவருக்காக இதுவரை திரையில் காணப்படாத புதிய தோற்றம் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் முக்கியமான கட்டத்தில் இடம்பெறும் இந்த கதாபாத்திரம், ஜெயிலர் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாத மூன்றாவது வாரத்தில் இந்தக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெறலாம் என்றும், அதற்கு முன்பாக ஹிருத்திக் ரோஷன் லுக் டெஸ்டில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமம் சுமார் ரூ.160 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமேசான் பிரைம் வீடியோ இந்த உரிமத்தைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஓடிடி ஒப்பந்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவின் அட்டப்பாடி மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், முதல் பாகத்தில் இடம்பெற்ற மோகன்லாலின் ‘மேத்யூ’ கதாபாத்திரமும் இரண்டாம் பாகத்தில் தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்திற்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர், இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார்.

இருப்பினும், ஹிருத்திக் ரோஷன் கேமியோ கதாபாத்திரம், ஓடிடி ஒப்பந்தம் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பாக படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hrithik Roshan to make a cameo in Jailer 2 A massive cameo awaits in Jailer 2 Fans are excited


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->