NMACC 3-ஆம் ஆண்டு விழா: தங்க பட்டு புடவையில் ஜொலித்த நீடா அம்பானி; ஸ்டைலிஷ் உடையில் கலக்கிய ரன்வீர் சிங்..! - Seithipunal
Seithipunal


நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் 03-வது ஆண்டுவிழா இன்று மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது. மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள இந்த கலாச்சார மையத்தில் பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ரன்வீர் சிங், ஷாயித் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

இதில் நடிகர் ரன்வீர் சிங் மிகவும் ஸ்டைலிஷான உடையில் கம்பீரத்துடன் காணப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அதாவது, நேர்த்தியான அவரின் ஆடைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதே போல சல்மான் கான், ஷாயித் கபூர் ஆகியோர் ஸ்டைலாக காணப்பட்டனர்.


இந்திய கலைகள் மற்றும் கலாச்சாரத்தை பாதுக்காக்கவும், அவற்றை உலக அளவில் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் இந்த கலாச்சார மையம் உருவாக்கப்பட்டது. இதன் மூன்றாவது ஆண்டுவிழா இன்று நடைபெற்றது.

இதில் சினிமா, ஃபேஷன், இசை மற்றும் நாடகம் ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்து கொண்டாடும் வகையில் இந்த 03-வது ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.


இந்த விழாவில், அதன் தலைவரும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனருமான நீதா அம்பானி, தனது பாரம்பரியம் மிக்க மற்றும் பிரம்மாண்டமான தோற்றத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நிகழ்வில், நீதா அம்பானியின் ஆடை அலங்காரம் விழாவின் முக்கிய பேசுபொருளாக மாறியது.

நீதா அம்பானி இந்த விழாவிற்காக 'உருகிய தங்கம்' மற்றும் ஆழ்ந்த சிவப்பு நிறங்கள் கலந்த ஒரு ஒளிவீசும் பட்டுச் சேலையை அணிந்திருந்தார். இந்தச் சேலையில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் அனைவரையும் கவர்ந்தது. பாரம்பரிய இந்திய கைவினைத்திறனைப் பிரதிபலிக்கும் நகைகளை அணிந்திருந்தார். மரகதம் மற்றும் மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட அடுக்குகளாக அமைந்த தங்க நெக்லஸ் அவரது அலங்காரத்தின் முக்கிய பகுதிகளாக அமைந்தன. இந்த வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nita Ambani dazzled in a golden silk saree while Ranveer Singh rocked a stylish outfit at the NMACC 3rd Anniversary celebration


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->