சொந்த மண்ணில் வைத்து சென்னையை பந்தாடிய பஞ்சாப்; 02 வது தோல்வியை வெற்றிகரமாக தழுவிய சிஎஸ்கே..! - Seithipunal
Seithipunal


19 வது ஐபிஎல் போட்டியில் 05 சென்னை - பஞ்சாபி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 05 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்தது.

அணியின் சார்பில் சஞ்சு சாம்சன் 07 ரன்களிலும், ருதுராஜ் 28 ரங்களிலும் ஆட்டமிழக்க, ஆயுஷ் மாத்ரே நிதானமாக ஆடி 43 பந்துகளில், 73 ரன்களை குவித்தார். அடுத்து வந்த கார்த்திக் சர்மா 01 ரன்னிலும், சப்ராஸ்கான் 32 ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பிரசாந்த் வீர் 06 ரன்களிலும், சிவம் தூபே 45 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் அணி சார்பில் வைசாக் விஜயகுமார் 02 விக்கெட்டினையும், பார்லெட் மற்றும் மார்கோ யான்சொன் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

 210ரன்கள் என்ற வெற்றி இலக்கைநோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்து 05 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 50 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 43 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணி சார்பில் கம்போஜ் மற்றும் ஹென்றி தலா 02 விக்கெட்டினை வீழ்த்தினர். அதன்படி, 02 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, 02 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. மறுப்புறம் பஞ்சாப் அணி 02 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில்  முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுப்போல கடைசி இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Punjab defeats Chennai by 5 wickets


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->