75வது வயதை எட்டிய நடிகர் செந்தில்!தடபுடலாக நடந்த குடும்பத்துடன் பீமரத சாந்தி விழா கொண்டாட்டம்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் 75வது வயதை எட்டியதை முன்னிட்டு, அவருக்கான பீமரத சாந்தி விழா குடும்பத்தினர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

1951ஆம் ஆண்டு ராமமூர்த்தி – திருக்கம்மல் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த செந்தில், சிறுவயதிலேயே வாழ்க்கை சவால்களை எதிர்கொண்டார். 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய அவர், பல்வேறு வேலைகளை செய்து கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார். பின்னர் நாடகக் குழுவில் சேர்ந்ததன் மூலம் அவரது கலைப் பயணம் தொடங்கியது.

‘ஒரு கோவில் இரு தீபம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், பின்னர் பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். ‘வைதேகி காத்திருந்தால்’ படத்தில் கவுண்டமணியுடன் இணைந்து நடித்தது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் கவுண்டமணி–செந்தில் கூட்டணி தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை உருவாக்கி, நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தது.

1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்ட செந்திலுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான மணிகண்ட பிரபு பல் மருத்துவராகவும், மற்றொருவரான ஹேமச்சந்திர பிரபு திரைப்பட இயக்குநராகவும் உள்ளனர்.

இந்த நிலையில், 75வது வயதை முன்னிட்டு அமிர்தகடேஸ்வரர் உடனாகி அபிராமி அம்மன் கோவிலில் நடைபெற்ற பீமரத சாந்தி விழாவில் செந்தில் மற்றும் அவரது மனைவி இணைந்து சடங்குகளில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் பெருமளவில் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Senthil turns 75 Celebrates Bhimaratha Shanthi festival with family in a relaxed atmosphere


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->