கர்நாடகாவில் அதிர்ச்சி...! 'எங்களுக்குள் எதுவும் இல்லை' என்றாலும் நம்பவில்லை…! -அவமானம் தாங்க முடியாமல் உயிரிழந்த நிகிதா
Shock Karnataka There nothing between us but we dont believe it Nikita who died unable bear humiliation
கர்நாடகா சித்ரதுர்கா மாவட்டத்தின் ஒலல்கெரே பகுதியில் இயங்கி வரும் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த நிகிதா (23) என்ற மாணவி, திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மல்லாடிஹள்ளி பகுதியைச் சேர்ந்த நிகிதா, கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவியாக இருந்து, பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை பேராசிரியர் ராஜுவிடம் அடிக்கடி கேட்டுவந்தார். இதனை தவறாக புரிந்துகொண்ட சில மாணவர்கள், இருவருக்கும் தொடர்பு இருப்பதாக வதந்திகளை பரப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வதந்திகளால் மனமுடைந்த நிகிதா, “எங்களுக்குள் எந்த தவறான உறவும் இல்லை” என்று பலமுறை விளக்கம் அளித்தும், அதை யாரும் ஏற்கவில்லை. தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அவமான உணர்வால் துவண்டு போன அவர், வீட்டில் கடிதம் எழுதி வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஒலல்கெரே காவலர்கள் உடனடியாக வந்து, நிகிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், அவர் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினர்.அந்த கடிதத்தில், “பேராசிரியர் ராஜுவையும் என்னையும் தவறாக இணைத்து பேசியதால் தான் இந்த முடிவை எடுத்தேன்” என்று நிகிதா குறிப்பிட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த துயர சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், சமூகத்தில் வதந்திகளின் ஆபத்தை நினைவூட்டும் எச்சரிக்கையாகவும் மாறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சினேகா தற்கொலை தடுப்பு மையம் (Sneha Suicide Prevention Centre), மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு 24/7 இலவச ஆலோசனைகளை வழங்குகிறது. மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் லட்சுமி விஜயகுமாரால் நிறுவப்பட்ட இந்த மையம், +044-2464 0050 அல்லது +044-2464 0060 என்ற எண்களில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், ரகசியத்தன்மையுடன் உதவிகளை வழங்குகிறது.
முக்கிய தகவல்கள்:
தொலைபேசி எண்கள்: 044-2464 0050, 044-2464 0060 (24/7)
நேரடி மையம்: R.A. புரம், சென்னை (காலை 8 மணி - இரவு 10 மணி வரை)
சேவை: மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவு.
மாற்று எண்: தமிழக அரசின் சுகாதார உதவி எண் 104.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல; உதவிக்கு, சினேகா தற்கொலை தடுப்பு போன்ற மையங்களை அழையுங்கள்.
English Summary
Shock Karnataka There nothing between us but we dont believe it Nikita who died unable bear humiliation