வாக்குப்பதிவு நாளில் நீதிமன்றம் இயங்காது...! - தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அந்தந்த தேர்தல் தினங்களில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் நீதிபதி எஸ். அல்லி வெளியிட்டுள்ளார்.அதன்படி, புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடைபெறும் 9-ம் தேதி, அங்கு உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படாது.

அதேபோல், தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெறும் 23-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் மூடப்பட்டிருக்கும்.

மேலும், வாக்குப்பதிவை எளிதாக்கவும், பொதுமக்கள் தேர்தலில் சுலபமாக பங்கேற்கவும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Courts not function polling day Courts across state closed view election


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->