யூத் படம் 50கோடி வசூல்! நோ டென்ஷன்! "கத்துப்போம்.. ஜெயிப்போம்" - விமர்சனங்களுக்கு கென் கருணாஸ் தைரியமான பதில்!
Youth movie grosses 50 crores No tension Let shout let win Ken Karunas bold response to criticism
‘யூத்’ திரைப்படத்தின் மூலம் 50 கோடி வசூல் சாதனை படைத்துள்ள கென் கருணாஸ், தனது வெற்றி விழாவில் கூறிய கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சினிமா வாரிசு என்ற அடையாளத்துடன் வந்திருந்தாலும், விமர்சனங்களை தாண்டி தன்னைத்தான் ஒரு திறமையான படைப்பாளியாக நிரூபித்துள்ளார் கென் கருணாஸ். வெறும் 11 நாட்களில் 50 கோடி வசூல் செய்த இந்த படம், அவருக்கு பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
படத்துக்கு எதிராக வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை குறித்து பேசும்போது, “எல்லாருக்கும் எல்லாமே பிடிக்காது. விமர்சனங்களை நான் வெறுப்பாக பார்க்கவில்லை; அது எனக்கு பாடம். அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக வருவேன்” என்று அவர் கூறினார். மேலும், “கத்துப்போம்.. ஜெயிப்போம்” என்ற அவரது உற்சாகமான வார்த்தைகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த வெற்றிக்கு காரணமான தனது குருநாதர்களான இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல் பெற்றோர் கருணாஸ் மற்றும் கிரேஸ் மகிழ்ச்சிதான் தனது மிகப்பெரிய விருதாக இருப்பதாகவும் அவர் உணர்ச்சியுடன் பகிர்ந்தார்.
விமர்சனங்களைத் தடையாக அல்ல, வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றியுள்ள கென் கருணாஸ், ‘யூத்’ படத்தின் வெற்றியுடன் கோலிவுட்டில் தனது பயணத்தை வலுவாக தொடங்கியுள்ளார்.
English Summary
Youth movie grosses 50 crores No tension Let shout let win Ken Karunas bold response to criticism