''வார்த்தை விளையாட்டு விளையாட இது தொலைக்காட்சி அல்ல''; திருமாவளவன் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் பதில்..!
Manickam Tagores response to Thirumavalavans comment that this is not television to play word games
''அமைச்சரவையில் இடம்பெற்றதாலேயே தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாக சொல்ல முடியாது'' எனக் கூறிய விசிக தலைவைர் திருமாவளவனுக்கு, ''அமைச்சரவையில் இடம்பெற்றாலே அதில் நீங்களும் ஒரு அங்கம்தான். வார்த்தை விளையாட்டு வேண்டாம்'' என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது;
தவெக அரசு ஆட்சி அமைய ஆதரவு கொடுத்தது ஆதரவு நிலை என்றும், அமைச்சரவையில் இடம்பெற்றது தோழமை நிலை என்றும், அடுத்த நிலை கூட்டணி அமைக்கும் நிலை என்றும், பெயர் சூட்டுவதற்கான நிலை என்றும் குறிப்பிட்டதோடு, இதில் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே ஆதரவு நிலையோடு நிற்கிறார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தவெக தலைமையில் ஒரு நல்ல கூட்டணி அரசு அமைந்துள்ளதாகவும், ஆட்சியில் பங்கு கொடுத்து, முதல்வர் விஜய் தோழமையை உருவாக்கியுள்ளார். பரஸ்பர நம்பிக்கையோடும், சகோதரத்துவத்தோடும் தவெக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறதாக மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மூன்று கட்சிகளிலும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று கூறியதோடு, கூட்டணியை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது குறித்து, அடுத்த கூட்டத்தில் முடிவெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளதோடு, ''அமைச்சரவையில் இடம்பெற்றாலே அதில் நீங்களும் ஓர் அங்கம்தான். வார்த்தை விளையாட்டு விளையாட இது தொலைக்காட்சி அல்ல'' என்று திருமாவளவனுக்கு பதில் அளித்துள்ளார்.
அத்துடன் அவர், (திருமாவளவன்) கொண்ட கொள்கையில் தெளிவாக இருப்பவர் என்றும், பாஜக, ஆர்எஸ்எஸின் வகுப்புவாத, மதவாத கொள்கையை எதிர்த்து எந்த சஞ்சலமும் இல்லாமல் போராடுபவர் என்று கூறியதோடு, அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவரின் நிலை என்பது அவர் கட்சியின் நிலை. ஆக, அது குறித்து நாங்கள் பதில் சொல்ல முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியுள்ளார்.
English Summary
Manickam Tagores response to Thirumavalavans comment that this is not television to play word games