Hattrick Marriage; 61 வயதில் நீண்டநாள் காதலி கவுரியை திருமணம் செய்துள்ள அமீர்கான்; இணையத்தில் வைரலாக புகைப்படங்கள்.!
Aamir Khan marries longtime girlfriend Gauri at the age of 61
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக இருப்பவர், அமீர் கான். இவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணம் நடந்து, அவை இரண்டும் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது அவர் மூன்றாவதாக தனது நெருக்கிய தோழியை திருமணம் செய்துள்ளார். அமீர்கான் - கௌரி ஸ்ப்ராட் திருமணம் மும்பை பாந்த்ராவில் உள்ள அமீர்கான் வீட்டில் மிக எளிமையான முறையில் நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இந்திய சினிமாவில் ரூ.2000 கோடி வசூலை கொடுத்து சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் 61 வயதான அமீர்கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'தாரே ஜமீன் பர்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அமீர் கான் 1986-ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்தார். 15 வருடத்துக்கு மேல் அவருடன் வாழ்ந்தவர் கடந்த 2002-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அடுத்ததாக, இயக்குநர் கிரண் ராவை கடந்த 2005-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ஆமீர்கான். 2021-ஆம் ஆண்டு இந்தத் தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
முன்னதாக ''கவுரியும் நானும் 25 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். இப்போது நாங்கள் இருவரும் பார்ட்னராக இருக்கிறோம். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்கிறோம்'' என தனது பிறந்த நாளின் போது அமீர்கான் தெரிவித்தன நிலையில் இன்று திருமணம் செய்துள்ளார்.
English Summary
Aamir Khan marries longtime girlfriend Gauri at the age of 61