நெல்லை கூடங்குளம் அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு; 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்; மின்வெட்டு அதிகாரிக்கும் நிலை..?
1000 MW power generation stopped due to technical glitch at Nellai Kudankulam nuclear reactor
நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பழுது சரிசெய்யும் பணி நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. அங்கு மூன்று, நான்கு, ஐந்து மற்றும் 06- வது அணு உலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் முதலாவது அணு உலையில் நேற்று மாலை 04.43 மணியளவில் ஜெனரேட்டர் பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் பழுதை சரிசெய்யும் பணியில் இந்தியா மற்றும் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விரைவில் பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் துவங்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின் வெட்டு இருக்கும் நிலையில் இனிவரும் காலங்களில் இது அதிகரிக்க வாய்ப்புள்ளது.
English Summary
1000 MW power generation stopped due to technical glitch at Nellai Kudankulam nuclear reactor