''மிகச்சிறந்த மாணவியாக நான் இருந்தேன்''; இயக்குநர் பாக்யராஜிக்கு இறுதிஅஞ்சலி செலுத்த வராதது குறித்து நடிகை ஊர்வசி கூறியது என்ன..?
What did actress Urvashi say about not coming to pay her last respects to director Bhagyaraj
தமிழ் திரையுலகின் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட பாக்யராஜ் (73). இவர் உடல்நிலை மோசமான நிலையில் சென்னையில் அப்பலோ மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, கடந்த ஜூன் 27-ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் பாக்யராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஆனால், திரையுலகில் 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தின் மூலம் நடிகையாக ஊர்வசியை பாக்யராஜ் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் அவர் அஞ்சலி செலுத்த வராமல் இருந்தது பேசும் பொருளானது. இது குறித்து ஊர்வசி தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை ஊர்வசி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது; ''நான் பாக்யராஜ் மரணத்துக்கு வரவில்லை என கேட்பவர்களுக்கு பின்னால் ஒரு தாற்பரியம் இருக்கத்தானே செய்கிறது. நான் அங்கு சென்று வெளியே வரும்போது ரியாக்ஷன் கொடுக்க வேண்டும். அது என்ன மாதிரி ரியாக்ஷன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதை மற்றவர்கள் முன்னால் காட்டிக் கொள்வதற்கு எனக்கு விருப்பமில்லை. அது பாக்யராஜ் சாரின் ஆத்மாவுக்குத் தெரியும். அவர்கள் குடும்பத்துக்குத் தெரியும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பூர்ணிமா பாக்யராஜிடம் பேசியதாகவும், தன்னை பொறுத்தவரை பெரிய அளவிலான பாதிப்புகளை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லை என்றும், மீடியா முன்னால் ஓவர் எமோஷனலாகி, ஓவர் டிராமா கிரியேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது உண்மை என்று சிலரோ, பொய் என்று சிலரோ சொல்வார்கள். அதற்கு நான் இடம் கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாக்யராஜின் மிகச்சிறந்த மாணவியாக நான் இருந்தேன். எப்போதும் நான் சிரித்து பேச வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பம். நான் அழுவது பாக்யராஜுக்கு பிடிக்கவே பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நான் வந்திருந்தால், அழுதிருப்பேனா..? அவர் அப்படி படுத்திருப்பதை பார்ப்பதற்கு தனது சக்தி கிடையாது. என் மனதில் அவர் நன்றாக நடனமாடிக் கொண்டிருக்கிறார். அது அப்படியே இருக்கட்டும். அவரை ஐஸ் பாக்ஸில் பார்க்க வேண்டும் என நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
English Summary
What did actress Urvashi say about not coming to pay her last respects to director Bhagyaraj