பொது டெட் தேர்வு அறிவிக்கை எப்போது வெளியாகும்..? ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது என்ன..? - Seithipunal
Seithipunal


பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இந்நிலையில், பொது டெட் தேர்வு அறிவிக்கை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தனர். இந்நிலையில், மே மாத தேர்வு அறிவிக்கை இன்னும் வெளியடப்படவில்லை.

மத்திய அரசின் 'குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009'-இன் படி, 01 முதல் 08-ஆம் வகுப்பு வரை பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு 'ஆசிரியர் தகுதித் தேர்வு' (TET) குறைந்தபட்ச தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இளங்கலை மற்றும் பட்டய ஆசிரியர் படிப்பை (B.Ed / D.El.Ed) முடிக்கும் மாணவர்கள், உடனடியாக ஆசிரியர் பணியில் சேர ஏதுவாக இந்தத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.

இதற்கு முன்னதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2026-ஆம் ஆண்டிற்கான தற்காலிக ஆண்டு திட்ட அறிக்கையின் படி, (Annual Planner), நடப்பாண்டில் 07 வகையான தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதில், லட்சக்கணக்கானோர் ஆவலோடு எதிர்பார்த்த டெட் தேர்வுக்கான அறிவிக்கை மே மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

அத்துடன், இந்தாண்டு இறுதியில் இரண்டாவது முறையாக டெட் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டில் இரண்டு முறை டெட் தேர்வு நடத்தப்படும் என வாரியம் தெரிவித்ததால் தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

When will the public TET exam notification be released


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->