இளையராஜாவுக்கு ‘தொழில் திமிர்’ உண்டு.. பிரபல இயக்குநர் சுந்தரராஜன் ஓபன் டாக்! - Seithipunal
Seithipunal


இசைஞானி இளையராஜா தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் அவர், இதுவரை ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். வயது மூப்பையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘டோரத்தி’ திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்த பாடல்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி’ உள்ளிட்ட பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 2கே கிட்ஸ் தலைமுறையினரும் இளையராஜாவின் இசையை ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தரராஜன், இளையராஜாவின் குணம் குறித்து பேசியிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் தங்களது தொழில் மீது ஒரு விதமான பெருமை இருக்கும் என்றும், அதை ‘தொழில் திமிர்’ என்று கூறலாம் என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய சுந்தரராஜன், இளையராஜாவிடம் அந்த தொழில் திமிர் அதிகமாகவே இருப்பதாக குறிப்பிட்டார். மேலும், ஒரு இசையமைப்பாளருக்கே அந்த அளவுக்கு தொழில் மீதான நம்பிக்கை இருந்தால், எழுத்தாளருக்கு எவ்வளவு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

எழுத்தாளரின் பேனாதான் தலை குனியும் என்றும், எழுத்தாளர் தலைகுனிய மாட்டார் என்றும் குறிப்பிட்ட சுந்தரராஜன், ஒரு படத்தின் வெற்றி மற்றும் போராட்டங்களில் எழுத்தாளரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் பேசினார்.

இளையராஜாவுடன் சுந்தரராஜன் ஏற்கனவே பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். குறிப்பாக ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘ராஜாதி ராஜா’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார். அதிலும், இளையராஜா ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த ட்யூன்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமாக ‘வைதேகி காத்திருந்தாள்’ இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இளையராஜாவிடம் இருக்கும் தன்னம்பிக்கையையும் தொழில் மீதான பிடிப்பையும் ‘தொழில் திமிர்’ என சுந்தரராஜன் குறிப்பிட்டிருப்பது, தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ilaiyaraaja has professional arrogance Famous director Sundararajan speaks openly


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->