இம்ரான் ஹாஷ்மிக்கு உடல்நலக்குறைவு… பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதியானதாக தகவல்...!
Emraan Hashmi unwell Swine flu confirmed
பிரபல இந்தி நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மும்பையில் மருத்துவரை அணுகி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

பரிசோதனை முடிவில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, உடல்நலப் பாதிப்பு காரணமாக இம்ரான் ஹாஷ்மி பங்கேற்க இருந்த பெங்களூரு ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சி, தற்போது செப்டம்பர் 12-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடிகர் விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Emraan Hashmi unwell Swine flu confirmed