நடிகை பிரீத்தி ஜிந்தாவின் முகத்தை மார்பிங் செய்து, ஏஐ மூலம் போலி வீடியோக்கள்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


நடிகை பிரீத்தி ஜிந்தாவின் முகத்தை மார்பிங் செய்து, ஏஐ மூலம் போலி வீடியோக்கள் பல யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சோசியல் மீடியா தளங்களில் உலா வருகின்றன. நடிகையின் அனுமதியில்லாமல் அவருடைய முகம் மற்றும் பப்ளிக் இமேஜை பயன்படுத்தி போலி விளம்பரங்களும், ப்ரொமோஷன்களும் அதிகரித்துள்ளன.

இவை தனது தனிப்பட்ட உரிமை மற்றும் பிரைவசிக்கு எதிரானது எனக்கூறி  நடிகை பிரீத்தி ஜிந்தா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  

அவருடைய மனுவில் தன்னுடைய அனுமதி இல்லாமல் ஏஐ மூலம் உண்மையான வீடியோக்களை போலவே உருவாக்கி, சில ப்ரொமோஷன்களுக்கு  மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களை பயன்படுத்துவதாகவும் நிஜம் எது?  போலி எது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்ததாகவும், அந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட சோசியல் மீடியா பக்கங்களிலிருந்து நீக்க உத்தரவிடக்கோரி, வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு மார்பிங் செய்யப்பட்ட அல்லது ஆபாசமான கன்டென்ட்டுகள் இருக்கும் குறிப்பிட்ட லிங்குகளை பிரீத்தி ஜிந்தா அடையாளம் காட்டினால், அதை உடனே தூக்க தயாராக இருப்பதாக பதிலளித்துள்ளது.

அத்துடன், ஒட்டுமொத்தமாக எல்லா கன்டென்ட்டையும் கண்காணித்துத் தூக்குவது கடினம் என்ற வகையிலும் பதிலளித்துள்ளது.  

இந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ் ஜாம்தார்,  "உண்மையான ஆன்லைன் கன்டென்ட்டுகளுக்கு எந்தப் பாதிப்பும் வராதவாறு, அதே சமயம் தவறான போலி கன்டென்ட்டுகளை மட்டும் துல்லியமாக நீக்கும்படி'' சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கூகுள், மெட்டா மற்றும் பிரீத்தி ஜிந்தா தரப்பு என அனைவரும் ஒன்றாக ஆலோசித்து, இந்தத் தவறான கன்டென்ட்டுகளை ஈஸியாக டெலீட் செய்யக்கூடிய வழிவகையைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Court orders action against fake videos using AI to morph actress Preity Zintas face


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->