37 நகர்வில் சமநிலை…! - ஆர். பிரக்ஞானந்தா 4-வது சுற்றை டிராவாக முடித்து நிலைநிறுத்தல்...!
Balance 37 moves R Praggnanandhaa ends 4th round draw and maintains
சைப்ரஸின் பாஃபோஸ் நகரில் நடைபெற்று வரும் ‘கேண்டிடேட்ஸ் செஸ்’ தொடர் சுவாரஸ்யமான திருப்பங்களை சந்தித்து வருகிறது. 4-வது சுற்றில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் மத்தியாஸ் ப்ளூபாம் ஆகியோருடன் மோதினார்.

கருப்பு காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 37-வது நகர்வில் ஆட்டத்தை டிராவாக முடித்து சமநிலையை நிலைநிறுத்தினார்.மற்றொரு ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவ், அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா மீது 36-வது நகர்வில் வெற்றி பெற்று அசத்தினார்.
இதனால், மொத்தம் 3.5 புள்ளிகளுடன் சிந்தாரோவ் தற்போது தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.கருவானா 2.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கும் நிலையில், ப்ளூபாம், பிரக்ஞானந்தா மற்றும் நெதர்லாந்தின் அனிஷ் கிரி ஆகியோர் தலா 2 புள்ளிகளுடன் 3 முதல் 5-வது இடங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அதேபோல், சீனாவின் வெய் யி மற்றும் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா ஆகியோர் தலா 1.5 புள்ளிகளுடன் 6 மற்றும் 7-வது இடங்களில் உள்ளனர். ரஷ்யாவின் ஆண்ட்ரே எசிபென்கோ 1 புள்ளியுடன் 8-வது இடத்தில் தங்கி உள்ளார்.
இன்னும் 10 சுற்றுகள் மீதமுள்ள நிலையில், போட்டி மேலும் கடும் போட்டியுடன் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Balance 37 moves R Praggnanandhaa ends 4th round draw and maintains