எல்லா பிரச்சனையும் ஓவர்! ஏப்ரல் இறுதியில் திரைக்கு வருமா ஜனநாயகன்? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்!
All problems are over Will Janyayan hit the screens by the end of April Vijay fans are getting ready to celebrate
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் இந்த படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வரவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படம் வெளியாகாமல் தாமதமானது. பின்னர் ரிவைசிங் கமிட்டி மற்றும் மறு தணிக்கை குழு ஆய்வுகளும் நீண்டதால், வெளியீடு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் மற்றும் வசனங்கள் அதிகமாக இருப்பதே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதற்கிடையே தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகளும் வெளியீட்டை மேலும் சிக்கலாக்கியது.
இந்நிலையில், தற்போது தணிக்கை தொடர்பான பிரச்சனைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், படம் ஏப்ரல் மாத இறுதியில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஏப்ரல் 24 அல்லது ஏப்ரல் 30 ஆகிய தேதிகள் வெளியீட்டிற்காக பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் நீண்டநாளாக காத்திருந்த விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம், அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ளதால் கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது.
வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், ‘ஜனநாயகன்’ திரையரங்குகளில் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
All problems are over Will Janyayan hit the screens by the end of April Vijay fans are getting ready to celebrate