காந்தராவை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் உள்ளிட்ட அனைவரையும் இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ரிஷப் ஷெட்டி; காரணம் என்ன..? - Seithipunal
Seithipunal


ரிஷப் ஷெட்டி கடந்த சில தினங்களாக இன்ஸ்டாகிராமில் பல பிரபலங்களை அன்ஃபாலோ செய்ததார். குறிப்பாக கன்னட நடிகர் மற்றும் இயக்குநர் ராஜ் பி ஷெட்டி மற்றும் நடிகை ருக்மிணி வசந்த் ஆகியோரை அன்ஃபாலோ செய்ததார் என்ற செய்தி பரபரப்பானது.

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக, இயக்குநராக புகழ்பெற்றவர் ரிஷப் ஷெட்டி.  இவர் 'காந்தாரா' படத்தை இயக்கி நடித்ததற்கு பிறகு இவர் உலக அளவில் அதிக பிரபலமானார். 

கடந்த சில தினங்களாக இன்ஸ்டாகிராமில் பல பிரபலங்களை ரிஷப் ஷெட்டி  அன்ஃபாலோ செய்ததார். குறிப்பாக கன்னட நடிகர் மற்றும் இயக்குநர் ராஜ் பி ஷெட்டி மற்றும் நடிகை ருக்மிணி வசந்த் ஆகியோரை அன்ஃபாலோ செய்த செய்தி பரவலானது. அதற்கு முன்பு இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய 'காந்தாரா' படத்தை தயாரித்த ஹொம்பாலே நிறுவனத்தையும், தயாரிப்பாளரையும் அன் ஃபாலோ செய்தார். அதும் பேசும் பொருளானது. இதனை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்ட்டா கணக்கிலிருந்து பலரையும் அன் ஃபாலோ செய்துள்ளார். இப்போது அவரது மனைவி பிரகதி, அவரது தயாரிப்பு நிறுவனம் மற்றும் அவரது Rishab Shetty Foundation ஆகிய மூன்று கணக்குகளை மட்டுமே ஃபாலோ செய்து வருகிறார். 

இத்தயையடுத்து பல வதந்திகள் இணையத்தில் பரவத் தொடங்கியுள்ளன. அதே சமயம் தனது எக்ஸ் பக்கத்தில் ஹோம்பாலே, ராஜ் பி ஷெட்டி, ருக்மிணி வசந்த் ஆகியோரை இன்னும் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார். இன்ஸ்ட்டாவில் மட்டும் ஏன் இந்த மாற்றம் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. ஆனாலும் பெரும்பாலான பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரையும் FOLLOW செய்யாமல் அதிக FOLLOWERS வைத்திருப்பதை பெருமையாக கருதுவதாக தெரிகிறது.

ரிஷப் செட்டி, 'கந்தாரா' படத்திற்கு பிறகு பிரசாந்த் வர்மா இயக்கும் 'ஜெய் ஹனுமான்' திரைப்படத்தில் அனுமன் வேடத்திலும், 'தி பிரைட் ஆஃப் பாரத்' என்ற வரலாற்றுத் திரைப்படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜராகவும் நடிக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rishab Shetty Unfollows Everyone on Instagram


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->