வேட்பாளர்கள் பட்டியலை அடித்து திருத்திய ராகுல்! தமிழக காங்கிரஸ் உள்கட்சி பூசல் வெளிச்சம்! வேட்பாளர்களை தேர்வில் தாமதம்! கோவத்தில் ராகுல்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில், வேட்பாளர் பட்டியல் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக, அகில இந்திய தலைமையின் தலையீடு, குறிப்பாக ராகுல் காந்தியின் எதிர்ப்பு கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தயாரித்த முதல் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி நிராகரித்து, புதிய பட்டியல் தயாரித்து அனுப்புமாறு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது பட்டியல் தயாரிக்கப்பட்டு டெல்லியில் காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களான கே.சி.வேணுகோபால் மற்றும் கிரிஸ் சோடங்கர் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைகளில் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள், சீட் விற்பனை குற்றச்சாட்டுகள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் அழுத்தம் போன்ற பல விவகாரங்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், முன்னதாகவே எம்.பி. ஜோதிமணி மற்றும் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் வேட்பாளர் தேர்வு முறையை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற ஜூம் கூட்டத்திலும் இந்த விவகாரம் கடும் விவாதத்துக்குள்ளானது.

இந்த உள்கட்சி முரண்பாடுகள் காரணமாகவே வேட்பாளர் பட்டியல் பலமுறை திருத்தப்பட்டு வருவதாகவும், இறுதி பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தேர்தலுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற பேச்சுகளும் கட்சிக்குள் எழுந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul edits candidate list Tamil Nadu Congress internal party dispute exposed Delay in selection of candidates Rahul in Goa


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->