கீர்த்தி சுரேஷ் கிட்ட அந்த பழக்கம் இருக்கு.. கீர்த்தி சுரேஷின் ‘சீக்ரெட்’ பழக்கத்தை வெளிப்படுத்திய சமந்தா!
Keerthy Suresh has that habit Samantha reveals Keerthy Suresh secret habit
தென்னிந்திய நடிகைகளுக்கிடையே இருக்கும் நட்பு குறித்து பலமுறை பேசப்பட்டுள்ள நிலையில், நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “கீர்த்தி சுரேஷ் குடிக்கவே மாட்டார். ஆனால், அவரிடம் அதைவிட ‘டேஞ்சரான’ ஒரு பழக்கம் இருக்கிறது. அது வெறும் 0.3 நொடிகளில் நடக்கும்,” என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
மேலும், “நடு இரவு 2 மணிக்கே வந்தாலும் அவர் full energy-யில் இருப்பார். ஒரு நொடியிலேயே உங்களை கலாய்த்து ‘damage’ செய்து விடுவார். கீர்த்திக்கு அபாரமான ஹ்யூமர் சென்ஸ் இருக்கிறது. எனக்குத் தெரிந்தவர்களில் அதிகம் சிரிக்க வைக்கும் பெண் அவர் தான்,” என்று பாராட்டினார்.
சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நடிகைகள் தொழிலில் போட்டியாளர்களாக இருந்தாலும், அவர்களுக்கிடையே இருக்கும் நட்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கீர்த்தி சுரேஷின் நகைச்சுவை உணர்வு குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
Keerthy Suresh has that habit Samantha reveals Keerthy Suresh secret habit