''ரூ.8,000 டோக்கனை வைத்து குடித்து உயிரிழந்தவர்களின் உயிர்களை திரும்ப வாங்க முடியுமா..? அழிக்கப்பட்ட இயற்கை வளங்களை திரும்ப கொண்டு வர முடியுமா..?'' சீமான் கேள்வி..! - Seithipunal
Seithipunal


நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாமக்கல்லில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது ரூ.8 ஆயிரம் டோக்கனை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்ய முடியும்? குடித்து குடித்து உயிரிழந்தவர்களின் உயிர்களை திரும்ப வாங்க முடியுமா..? அழிக்கப்பட்ட இயற்கை வளங்களை திரும்ப கொண்டு வர முடியுமா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், தமிழனின் வீரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மதுபாட்டிலுக்கு வீரன் என பெயர் வைத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியதோடு,  நான் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவேன். பனம்பால், தென்னம்பால் இறக்குவேன். 15 ஆண்டுகளாக கத்திவிட்டேன். இனியும் என்னை கத்தவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் ஆட்சிக்கு வந்தால் மக்களை கையேந்தும் நிற்கும் நிலைக்கு நான் தள்ளமாட்டேன் என்றும், அனைத்து தரப்பினருக்கும் அரசு வேலை கிடைக்கச் செய்வேன். ஊழல் இல்லாத, கொலை, கொள்ளை இல்லாத நாடாக தமிழகத்தை மாற்ற நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் என்று பரப்புரை செய்துள்ளார்.

வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சிந்தித்து செயல்படுங்கள் என்றும், ஒற்றை விரலால் நாட்டையே மாற்றலாம். நமக்கு சாப்பாடு தந்த விவசாயியை நினைத்து, எங்களுக்கு வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெற்றால், மக்கள் வெல்வீர்கள் என்று சீமான் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What can be done with an rs8000 token asks Seeman


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->