இந்தியாவில் Realme 16 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்னென்ன..? - Seithipunal
Seithipunal


உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை சீனா அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறது. அதன்படி, எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கமாக கொண்டுள்ளது.

அதன்படி, தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 16 5ஜி போன் அறிமுகமாகியுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து கீழே பார்க்கலாம்.

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, அதன் பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. இந்நிலையில், ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த போனின் பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள செல்ஃபி மிர்ரர் (Mirror) தான் இந்த போனின் ஹைலைட்டாக உள்ளது. இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போனின் விலை ரூ.31,999 முதல் தொடங்குகிறது.

ரியல்மி 16 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்;

6.57 இன்ச் டிஸ்பிளே

மீடியாடெக் டிமான்சிட்டி 6400 டர்போ சிப்செட்

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

8, 12ஜிபி ரேம்

128, 256ஜிபி ஸ்டோரேஜ்

50 + 2 மெகாபிக்சல் என இரண்டு கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது

50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

7,000mAh பேட்டரி

60 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்

யுஎஸ்பி டைப்-சி போர்ட்

5ஜி நெட்வொர்க்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Realme 16 5G Smartphone Launched in India


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->