கன்னத்தோடு கன்னம் வச்சு ஓவர் நெருக்கம் காட்டும் சிவாங்கி! காதலா? புது ப்ராஜெக்டா? இணையத்தில் ரசிகர்கள் கேள்விகள்!
Shivangi shows off her cheeky cheeky side Is it love New project Fans have questions on the internet
சிவாங்கி என்றாலே, பாடல், நகைச்சுவை, கியூட்டான சேட்டை என அனைத்தும் ரசிகர்களின் நினைவுக்கு வரும். Super Singer நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக தனது திறமையை நிரூபித்து, அதன் பின்னர் Cook With Comali நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு, தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர் சிவாங்கி. இசை நிகழ்ச்சியில் கால் பதித்து, சமையல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று, இன்று பல்துறை திறமை கொண்ட பிரபலமாக அவர் உயர்ந்துள்ளார்.

சூப்பர் சிங்கர் சீசன் 7-ல் பங்கேற்ற சிவாங்கி, அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து மூன்று சீசன்கள் கோமாளியாக கலந்துகொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்தார். குறிப்பாக நடிகர் அஸ்வின் உடன் அவர் செய்த சேட்டைகள், அந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தன. நான்காவது சீசனில் அதிரடியாக குக்காக மாறிய சிவாங்கி, தனது சமையல் திறமையால் நடுவர்களையே ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ், சிவாங்கியை சினிமா வரை அழைத்துச் சென்றது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான Don படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், பின்னர் வடிவேலு உடன் Naai Sekar Returns, Kasethan Kadavulada போன்ற படங்களிலும் நடித்தார். அதேசமயம், விஜய் டிவிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட Top Cooku Dupe Cooku நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன் இரண்டாவது சீசனில் தொகுப்பாளராகவும் மாறினார்.
இந்த நிலையில், தற்போது சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் முகேஷ் ரவி-யை கட்டியணைத்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதற்கு லவ் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சிலர் “புது ப்ராஜெக்டா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதே புகைப்படத்தை முகேஷ் ரவியும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ‘கம்பி கட்ன கதை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள முகேஷ் ரவி மற்றும் சிவாங்கி இருவரும் நெருக்கமாக இருக்கும் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டதையடுத்து, இருவரும் காதலித்து வருகிறார்களா என்ற கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
ஆனால், இந்தப் புகைப்படம் குறித்து சிவாங்கி இதுவரை எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்காததால், இது உண்மையான காதலா அல்லது ஏதேனும் புதிய திரைப்படம் அல்லது நிகழ்ச்சிக்கான அறிவிப்பா என்ற குழப்பம் இணையவாசிகள் மத்தியில் நீடித்து வருகிறது. எதுவாக இருந்தாலும், சிவாங்கியின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
English Summary
Shivangi shows off her cheeky cheeky side Is it love New project Fans have questions on the internet