பிரபாஸின் 'தி ராஜா சாப்' ஓடிடி ரிலீஸ்; முடங்கிய ஜியோ ஹாட்ஸ்டார் தளம்..!
The Jio Hotstar platform crashed due to the impact of Prabhas The Raja Saab OTT release
தென்னிந்தியாவின் பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ‘தி ராஜா சாப்’ திரைப்படம், கடந்த ஜனவரி 09-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. மாருதி இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸுடன் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 06) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
நள்ளிரவு 00:00 க்கு (12;00 மணி) படம் வெளியான சில நிமிடங்களிலேயே, லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திற்குள் நுழைந்ததால் இணையதளம் முடங்கியுள்ளது. குறிப்பாக Remind Me பட்டனை ஒரு கோடிக்கும் அதிகமானோர் அழுத்தியதே இந்த முடக்கத்துக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஜியோ ஹாட்ஸ்டார் தனது சர்வர் திறனை மேம்படுத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், ''பிரபாஸ் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி, இப்போது தளம் சீரமைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
திரையரங்குகளில் வெளியாகிய இந்த படம் கடும் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இதனால் எதிர்பார்த்த வசூல் இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. எனினும் ஓடிடியில் இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளதால் முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதாவது, திரையரங்கு பதிப்பில் இடம்பெறாத பல காட்சிகள் ஓடிடி பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
The Jio Hotstar platform crashed due to the impact of Prabhas The Raja Saab OTT release