பொருநையைப் போற்றுகிறேன் என்னும் போர்வையில் போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் தம்பட்டம்; ஸ்டாலினை குற்றம் சாட்டும் நயினார் நாகேந்திரன்..! - Seithipunal
Seithipunal


'பொருநையைப் போற்றுகிறேன்' என்னும் போர்வையில் போட்டோஷூட்டில் மட்டுமே ஆர்வம் காட்டி, சமூக வலைதளத்தில் பதிவிட்டு வெற்றுத் தம்பட்டம் அடிக்கும் தங்கள் அரசு தமது விளம்பர மோகத்தாலேயே வீழும் நாள் நெடுந்தூரமில்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

''நெல்லை சீமைக்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைத்துள்ளதாகப் பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த அக்டோபர் மாதம் தென்காசி மாவட்டம் கூடலூர் அரசுப் பள்ளிக்குப் புதிய கட்டடங்களைத் துவக்கி வைத்தது ஞாபகம் இருக்கிறதா?

தாங்கள் துவக்கி வைத்த அந்தக் கட்டடங்களில் தடுப்புச்சுவர் தொடங்கி கழிவறை வரை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாததாலும், வேறு வகுப்பறைகள் இல்லாததாலும் மரத்தடி நிழலில் மாணவர்கள் பயிலும் கொடூரம் நேர்ந்துள்ளது.

தேர்தல் நேரம் கழுத்தை நெறிக்கும் வேளையில் கணக்கு காட்டவும், காணுமிடமெல்லாம் விளம்பரம் வைக்கவும், கடைசி நேரத்தில் கமிஷன் கல்லா கட்டவும், கஜானாவை வழித்தெடுக்க மட்டுமே திமுக ஆட்சியில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

'பொருநையைப் போற்றுகிறேன்' என்னும் போர்வையில் போட்டோஷூட்டில் மட்டுமே ஆர்வம் காட்டி, அரைகுறையாக நான்கு திட்டங்களைத் துவக்கி வைத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு வெற்றுத் தம்பட்டம் அடிக்கும் தங்கள் அரசு தமது விளம்பர மோகத்தாலேயே வீழும் நாள் நெடுந்தூரமில்லை.'' என்று பதிவில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nainar Nagendran accuses the Chief Minister of conducting a photoshoot under the guise of praising the Porunai


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->