தவெகவில் இணைந்தார் யூடியூபர் பெலிக்ஸ்ஜெரால்டு; குஷியில் கட்சியினர்..!
YouTuber Felix Gerald joins TVK
பிரபல யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சென்னை பனையூரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துள்ளார்.
வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். இக்கட்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து வருகின்ற நிலையில், மிக முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் விஜயை சந்தித்து தவெகவில் இணைந்துள்ளார்.
இன்னும் பலர் தவெகவில் இணைய இருப்பதாக ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கூறியிருந்த தோடு, அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல யுடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு, பனையூரில் விஜயை நேரில் சந்தித்து தவெகவில் இணைந்துள்ளார்.
தவெகவில் இணைந்தது குறித்து பெலிக்ஸ் ஜெரால்டு வெளியிட்ட சமூகதளப்பதிவில் கூறியுள்ளதாவது:

5''1 வயதான நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக உருவாக்கிய தொழில் பொறுப்புகளில் இருந்து விலகி, அடுத்த தலைமுறைக்கான புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு இயக்கத்தில் இணைந்துள்ளேன். தமிழகத்தின் எதிர்காலமாகவும், நம்பிக்கையாகவும் கருதப்படும் விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி. விஜய் நிச்சயம் நாம் இதை செய்து முடிப்போம்.'' எனப் பதிவிட்டுள்ளார்.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து, பிரபல யுடியூபர் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்தது தொடர்பான வழக்கில் இவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெலிக்ஸ் ஜெரால்டு, கரூர் சம்பவம் தொடர்பாக இவர் விஜய்க்கு ஆதரவாக பேசிய பின்னர் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டார். 2024 பிப்ரவரியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நிலையில், கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று வரும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டது தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக நீதி, மதச்சார்பற்ற தன்மை, தமிழ் தேசியம் ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளை கொண்டுள்ளதாக கூறும் தவெக, இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
English Summary
YouTuber Felix Gerald joins TVK