தெலுங்கானா மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு காரணம் சோனியாவின் தியாகம்; ரேவந்த் ரெட்டி பேச்சு; பாஜ கடும் கண்டனம்..!
The BJP condemns Revanth Reddys statement that Sonia Gandhis sacrifice is the reason for the Christmas celebrations in Telangana
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது:
தெலுங்கானாவில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால், அதற்கு சோனியாவின் பங்கு முக்கியமானது என்றும், அவரின் தியாகம் ஒரு காரணம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், டிசம்பர் மாதத்துக்கு சிறப்பு வாய்ந்த முக்கியத்துவம் உள்ளது. இந்த மாதத்தில் தான் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. சோனியாவின் பிறந்த நாளும் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜ செய்தித்தொடர்பாளர் ஆர்பி சிங் கூறியதாவது:

சோனியா எப்போதும் ஹிந்து மதம் மீது நம்பிக்கை காட்டியது இல்லை என்றும், அவர் பிறந்த மதமான கிறிஸ்துவத்தையே பின்பற்றி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, ஜன்பத் சாலையில் உள்ள அவரது வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடக்கும். தீபாவளி கொண்டாடப்பட மாட்டாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஒவ்வொருவரும், தனது நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தை பின்பற்றுவது என்பது அவர்களின் விருப்பம். ஆனால், முதல்வரின் பேச்சு தவறானது என்று ஆர்பி சிங் குறிப்பிட்டுள்ளார்.

இவரை தொடந்து, பாஜ செய்தித் தொடர்பாளர் நவின் கோஹ்லி குறிப்பிட்டுள்ளதாவது: நேரு சோனியா குடும்பத்தை ஒவ்வொரு காங்கிரஸ் நிர்வாகியும் போற்றுவது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு அவர்களை கோருவது காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை ஓட்டு வங்கியாக காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் பார்ப்பது ஏன்? என்றும், அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட விரும்பினால், அது ஒரு அரசியல் நோக்கத்துக்காக இல்லாமல் அந்த பண்டிகையின் பொருட்டு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
The BJP condemns Revanth Reddys statement that Sonia Gandhis sacrifice is the reason for the Christmas celebrations in Telangana