வளைகுடாவில் போர் பதற்றம்: அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்...! - ஆறு வீரர்கள் பரிதாப பலி
War Tensions Gulf Iran Attacks US Bases Six Soldiers Tragically Killed
வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை நோக்கி ஏவுகணைகள் ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 5 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், அவை முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும் தற்போது பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஆறு அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமானம் தங்களது தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ள நிலையில், அதனை அமெரிக்க ராணுவம் மறுத்துள்ளது. எதிரிகளின் தாக்குதல் காரணமாக அல்ல, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையில் ஈரான் மீது வரும் நாட்களில் மேலும் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய மையமாக செயல்படும் கார்க் தீவை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அங்கிருந்த ராணுவ கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
English Summary
War Tensions Gulf Iran Attacks US Bases Six Soldiers Tragically Killed