'பேரவையில் குரலை நசுக்கச் சதியா'...? - இ.பி.எஸ். எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளால் சூடாகும் அரசியல் களம்...!
conspiracy to suppress voices assembly EPS political arena heating up with series questions raised
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, கைது செய்யப்பட்ட நேரம் அரசியல் சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது,"சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின், தற்போது காவலர்கள் மூலம் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் சூழலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் நாகரிகத்தையும் நாவடக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அவர் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை உணராமல், தரம் தாழ்ந்த கருத்துகளையும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளையும் தொடர்ந்து முன்வைப்பது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.அவர் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாக சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது வேறு.
ஆனால், நாளை தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய அரசு அவசரம் காட்டுவது, இந்த நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை இயல்பாகவே மக்களிடையே உருவாக்கியுள்ளது.
சட்டமன்ற ஜனநாயக அமைப்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்பது மிக முக்கியமான அரசியல் பொறுப்பு. அந்தப் பொறுப்பில் இருப்பவரின் பங்கேற்பு இல்லாமல் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு செயல்படுகிறது என்ற விமர்சனத்திற்கு இந்த நடவடிக்கையே வலுசேர்க்கிறது.
இது ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்ற அணுகுமுறையாக இல்லை.எனவே, நாளை தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து, அதனை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
conspiracy to suppress voices assembly EPS political arena heating up with series questions raised