பிரபு தேவா கடவுள் மாதிரி! நாய்னு சொன்னது பிரீத்தியை அல்ல!பிரபுதேவா நடன சர்ச்சைக்கு ராபர்ட் பதிலடி! - Seithipunal
Seithipunal


நடன இயக்குநர் பிரபுதேவா பரதநாட்டியம் ஆடியது தொடர்பாக நடிகர் சஞ்சீவின் மனைவியும், நடனக் கலைஞருமான பிரீத்தி தெரிவித்த விமர்சனம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலளித்த ராபர்ட் மாஸ்டர் தற்போது தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை நாரத கான சபாவில் நடைபெற்ற குரு ஸ்ரீ உடுப்பி லட்சுமி நாராயணனின் 100-வது பிறந்தநாள் விழாவில், தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரபுதேவா மேடையில் பரதநாட்டியம் ஆடினார். இந்த நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து, நடிகர் சஞ்சீவின் மனைவி பிரீத்தி தனது சமூக வலைதளத்தில், "பிரபுதேவா போன்ற ஒரு லெஜெண்டரி நடனக் கலைஞர் இப்படிப்பட்ட தவறை செய்திருப்பார் என்று நினைக்கவில்லை. அவருக்குப் பதிலாக நன்கு பயிற்சி பெற்ற இளம் கலைஞருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்" என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ராபர்ட் மாஸ்டர், "பிரபுதேவா எனக்கு கடவுளுக்கு சமமானவர். இதில் எந்த நாய் வந்தாலும் எனக்கு கவலையில்லை" என்று கூறியிருந்தார். அந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராபர்ட் மாஸ்டர், தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "நேற்று பேசிய வீடியோவில் தெரியாமல் 'நாய்' என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டேன். அது தவறான விஷயம். நான் பிரீத்தியையோ அல்லது வேறு யாரையுமோ குறிப்பிட்டு அப்படி பேசவில்லை. என்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த நான்கு மாஸ்டர்களைக் குறிப்பிட்டுதான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த நால்வருக்குத்தான் அந்த வார்த்தை பொருந்தும்; வேறு யாரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ராபர்ட் மாஸ்டரின் இந்த விளக்க வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இருப்பினும், பிரபுதேவாவின் நடனம் தொடர்பாக தொடங்கிய இந்த விவாதம் இன்னும் இணையத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prabhu Deva is like a god It wasnot Preethi I called a dog Robert hits back over the Prabhu Deva dance controversy


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->