எடப்பாடிக்கு தெரிந்தது துரோகம் மட்டுமே...!!! - தென்காசியில் ஓ. பன்னீர்செல்வம் கடும் தாக்கு - Seithipunal
Seithipunal


தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தனது பிரசாரத்தை தென்காசி மாவட்டத்தில் இருந்து தொடங்கினார். கடையநல்லூர் அருகிலுள்ள அச்சன்புதூரில் நேற்று இரவு நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,“தேர்தல் வந்தாலே அரசியல் கட்சிகள் அனைத்தும் களமிறங்கி பரபரப்பாக பிரசாரம் செய்கின்றன. அதில் எடப்பாடி பழனிசாமி என்ற ஒருவர் மேடைகளில் சத்தமாக பேசிக்கொண்டே இருக்கிறார்.

ஆனால் அவர் என்ன தெரிவிக்கிறார்  என்பது மக்களுக்கே தெளிவாக தெரியவில்லை. அவருடைய பேச்சுக்கு சரியான பதிலை மக்கள் தான் தேர்தலில் வழங்குவார்கள்.அவருக்கு தெரிந்த ஒன்று துரோகம் மட்டுமே.

தன்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர்களுக்கும், ஆட்சியில் நிலைத்து நிற்க உதவியவர்களுக்கும் அவர் நன்றி மறந்துள்ளார். முதலமைச்சர் பதவியை பெற அவர் எப்படி நடந்துகொண்டார், பின்னர் அதையே வழங்கியவர்களை எவ்வாறு மறந்தார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

எடப்பாடி பழனிசாமி பல தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் ‘நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா தான்’ என்ற தீர்மானத்தை புறக்கணித்து, ‘நான் தான் பொதுச்செயலாளர், நான் தான் தலைவர்’ என்று அறிவித்ததன் பின்னர் பல தேர்தல்களில் கடுமையான தோல்வி ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு பெரிய இயக்கத்தின் தலைவராக இருக்க வேண்டிய பண்புகள் அவரிடம் இல்லை. அனைவருக்கும் சொந்தமான இயக்கமாக இருந்த அண்ணா தி.மு.க.வை குறிப்பிட்ட சமூகத்தின் கட்சியாக மாற்றியிருப்பது அந்த இயக்கத்திற்கே செய்யப்பட்ட பெரிய துரோகம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது. அம்மா மற்றும் எம்.ஜி.ஆர் போட்டியிட்ட ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல முக்கிய தொகுதிகளிலும் கடுமையான பின்னடைவு ஏற்பட்டது.

உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரவிருக்கும் தேர்தலிலும் தென் மாவட்டங்களில் அவர்களுக்கு மீண்டும் தோல்வி காத்திருக்கிறது.

நான் தி.மு.க.வில் இணைந்ததை மக்கள் மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லதுரை உள்ளிட்ட பல தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Knows Only Betrayal O Panneerselvam Launches Fierce Attack Tenkasi


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->