எது உண்மை...? நீங்களும், உங்கள் கட்சியும் வெட்கப்பட வேண்டும்... மாணிக்கம் தாகூருக்கு பாஜக பதிலடி!
bjp narayanan reply to congress manikkam
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் பெ. விஸ்வநாதன் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் உண்மைக்குப் புறம்பாகத் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாக்கூர் தெரிவித்திருந்தார்.
இதற்க்கு பதிலடி கொடுத்து பாஜக நாராயணன் திருப்பதி அறிக்கையில், "எது உண்மை மாணிக்கம் தாக்கூர் அவர்களே, நீங்களும், உங்கள் கட்சியும் வெட்கப்படவேண்டிய நிகழ்வை நடத்தியவர் அமைச்சர் விஸ்வநாதன் . பொது வெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டிய அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், இப்படி அருவெறுக்கத்தக்க வகையில் பெண் குழந்தைகளிடம் நடந்து கொண்டதை உலகமே பார்த்து அதிர்ச்சியுற்றது. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டிய விஸ்வநாதன் அவர்களும், அவரை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பிருக்கிற நீங்களும், நடந்த தவறுக்கு “ஜாதியை” சொல்லி தப்பிக்க பார்ப்பது நடந்த அவலத்தை விட கொடூரமானது.
மேலும், ‘தாழ்த்தப்பட்ட சமூகம்’ என்று குறிப்பிட்டு அந்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது தாங்கள் தான். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற் வார்த்தை குறித்து சில தினங்களுக்கு முன்னர் சட்டசபையில் நடைபெற்ற விவாதங்களை பாருங்கள். இப்படி சொல்லியே அந்த சமூகத்தை எவ்வளவு காலம் அவமானப்படுத்திக் கொண்டே இருக்கும் காங்கிரஸ் கட்சி?
அரசியல் காரணங்களுக்காக ஜாதிகளை பிளவுபடுத்திய காங்கிரஸ் கட்சிக்கு ஜாதிகளை ஒருங்கிணைத்து அரவணைக்கும் ஆர் எஸ் எஸ் குறித்து விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என்பதை உணருங்கள்.
English Summary
bjp narayanan reply to congress manikkam