அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’.. ஹீரோயிசம் வேண்டாம்! ஜிவி பிரகாஷிடம் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட அஜித்! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் தற்போது சினிமாவை காட்டிலும் கார் ரேஸிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘டேர்டெவில்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் இணைந்து தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அஜித் பங்கேற்ற சர்வதேச கார் பந்தயங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள ஆவணப்படத்திற்கு ‘கிளாடியேட்டர்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் 90 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் - ஏ.எல்.விஜய் கூட்டணியில் ஏற்கனவே ‘கிரீடம்’ திரைப்படம் வெளியாகியிருந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இந்த ஆவணப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் ‘கிளாடியேட்டர்ஸ்’ குறித்து ஜி.வி.பிரகாஷ் அளித்துள்ள பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் கூறுகையில், அஜித்துடன் ரேஸிங் தொடர்பான ஆவணப்படத்தில் பணியாற்றி வருவதாகவும், சர்வதேச அளவில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அஜித்துக்காக தான் முதலில் ‘ஃபேன் பாய்’ பாணியில் ஹீரோயிசம் நிறைந்த இசையை உருவாக்கியதாகவும், ஆனால் அதனை கேட்ட அஜித், “ஹீரோயிசமே வேண்டாம்” என்று கூறியதாகவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதனால், அஜித்தின் ரேஸிங் பயணத்தை சினிமா ஹீரோவாக காட்டுவதைக் காட்டிலும், அவர் உண்மையில் சந்தித்த அனுபவங்களையும் பந்தயத்தின் பரபரப்பையும் இயல்பாக பதிவு செய்ய வேண்டும் என்பதில் அஜித் கவனம் செலுத்தியிருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajith Gladiators No heroism Ajith issues strict orders to GV Prakash


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->