அனுபமா பேட்டிக்கு அதிதி ஷங்கர் ஆதரவு.. “பொதுவெளியில் பேசியது பாராட்டுக்குரியது”! அதிதி ஷங்கர் ஓபன் டாக்!
Aditi Shankar supports Anupama interview Speaking out in the public domain is praiseworthy Aditi Shankar speaks her mind
நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் தனது முன்னாள் காதல் உறவு குறித்து பேசிய பல்வேறு விஷயங்கள் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த உறவில் மனரீதியாகவும், உடலளவிலும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்ததாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், அந்த உறவு காரணமாக திருமணம் குறித்தே தனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
அனுபமா குறிப்பிட்ட முன்னாள் காதலர் யார் என்பது குறித்து எந்த பெயரையும் அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் அது நடிகர் துருவ் விக்ரம்தான் என பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. இதுவரை இந்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
இந்நிலையில், நடிகையும் இயக்குநர் ஷங்கரின் மகளுமான அதிதி ஷங்கர், அனுபமாவின் பேட்டி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “சமீபத்தில் ஒரு நடிகையின் பேட்டியை பார்த்தேன். அதை வெளிப்படையாக பேசியதற்காக அவரை பாராட்ட வேண்டும். அது அவருடைய தனிப்பட்ட உண்மையான அனுபவம். யாரையும் பொதுவெளியில் குறைத்து காட்ட வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருந்ததாக நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற அனுபவங்களை பல பெண்களும், ஆண்களும் எதிர்கொண்டு வருவதாகவும், ஆனால் தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதையே சிலரால் அடையாளம் காண முடியாமல் இருப்பதாகவும் அதிதி குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், அனுபமா தனது தனிப்பட்ட அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்தது உறவுகளில் ஏற்படும் மனரீதியான துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும் என அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார்.
English Summary
Aditi Shankar supports Anupama interview Speaking out in the public domain is praiseworthy Aditi Shankar speaks her mind