ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்...! - தீப்பிடித்து எரியும் வளாகம்! - வைரல் வீடியோ
Attack US Embassy Baghdad Iraq Capital Compound Engulfed Flames Viral Video
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் பகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பிறகு அங்கு தீ விபத்து ஏற்பட்டதுடன், கட்டிடத்திலிருந்து கரும்புகை எழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.இந்த தாக்குதல் ட்ரோன் மூலம் நடத்தப்பட்டிருக்கலாம் என சில பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் ஏவுகணை தாக்குதலாகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும் இந்த சம்பவம் குறித்து அமெரிக்க தூதரகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடவில்லை. பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பாக்தாத் தூதரக வளாகம் குறிவைக்கப்பட்டிருப்பது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய மையமாக விளங்கும் கார்க் தீவை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் அங்கிருந்த ராணுவ கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும், தேவையானால் எண்ணெய் அமைப்புகளையும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை நோக்கி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஐந்து விமானங்கள் கடுமையாக சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடா பிராந்தியத்தில் இந்த தொடர் தாக்குதல்கள் புதிய பதற்ற சூழலை உருவாக்கியுள்ளன.
English Summary
Attack US Embassy Baghdad Iraq Capital Compound Engulfed Flames Viral Video