'என்னைப் பற்றி விஜயிடம் கேட்டீர்களா'...? - விஜய் கூட்டணி கேள்விக்கு சீமான் பதிலடி
Did you ask Vijay about me Seeman hits back at question regarding alliance Vijay
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சமூகத்தில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் குறித்து கடுமையாக கவலை தெரிவித்தார்.

அவர் “இன்றைய சூழலில் 6 வயது குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை; 60 வயது முதிய பெண்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சமூகம் முழுவதும் அச்ச நிலை உருவாகி வருகிறது.
பல குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மது போதையில் இருப்பது மிகவும் வேதனையான விஷயம்” என்று சீமான் தெரிவித்தார்.மேலும், “இந்த நிலைக்கு ஆட்சியாளர்கள் மட்டும் காரணமல்ல.
அந்த ஆட்சியை தேர்வு செய்த மக்களுக்கும் ஒரு அளவு பொறுப்பு இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் நடிகர் விஜய் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கிறார் என்ற தகவல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, “அதைப் பற்றி என்னிடம் கேட்கிறீர்கள்.
என்னைப்பற்றி விஜயிடம் ஒருமுறையாவது நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று சீமான் பதிலடி கேள்வி எழுப்பினார்.
English Summary
Did you ask Vijay about me Seeman hits back at question regarding alliance Vijay