மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜ கூட்டணியின் அமோக வெற்றிக்கு காரணம் பிரதமர் மோடியின் தலைமை; முதல்வர் பட்னவிஸ்..!
Chief Minister Fadnavis says the reason for the massive victory is Prime Minister Modis leadership
மஹாராஷ்டிரா மாநிலத்தில் 286 நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் தலைவர், உறுப்பினர்கள் பதவிகளுக்காக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், ஆளும் பாஜ தலைமையிலான மஹாயுதி கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. இதில், பாஜ 118 இடங்களிலும், ஷிண்டேவின் சிவசேனா 59 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 32 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 09 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 08 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தலைமை மற்றும் ஜே.பி. நட்டாவின் வழிகாட்டுதலே, இந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி நடக்கிறது. இதில், பாஜ தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், மஹாயுதி கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனைத்தொடர்ந்து தேர்தலில் வாக்காளர்களுக்கு மஹாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
''நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களில் பாஜ மீண்டும் முதலிடத்தில் உள்ளது.பிரதமர் மோடியின் தலைமை, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மற்றும் பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஆகியோரின் வழிகாட்டுதலே கட்சியின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்.
பாஜ மாநிலத் தலைவர் எம்எல்ஏ ரவீந்திர சவான் மற்றும் தொண்டர்களின் அயராத முயற்சியால், பாஜ மீண்டும் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.'' என்று பட்னவிஸ் கூறியுள்ளார்.
English Summary
Chief Minister Fadnavis says the reason for the massive victory is Prime Minister Modis leadership