“ஹீரோவா நடிக்க வேண்டாம்” என்ற இளையராஜா! ராமராஜன் நடிக்க மறுத்த படம்; தலைகீழாய் மாறிய ராஜ்கிரண் வாழ்க்கை..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தனது பயணத்தைத் தொடங்கியவர் ராஜ்கிரண். பின்னர் தயாரிப்பாளராக மாறி, நடிகர் ராமராஜனை வைத்து இரண்டு திரைப்படங்களை வெற்றிகரமாக தயாரித்தார். அதன் பின்னர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் “என் ராசாவின் மனசிலே” என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டார்.

ஆனால் அந்த படத்தில் நடிக்க ராமராஜன் மறுத்துவிட்டதால், வேறு வழியின்றி ராஜ்கிரண் தானே ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார். தனது முதல் படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜா இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் நேரடியாக அவரைச் சந்தித்து தனது முடிவை கூறியுள்ளார்.

அப்போது இளையராஜா,
“உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? வேறு ஒருவரை வைத்து படத்தை எடு,” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதனால் மனம் தளராத ராஜ்கிரண், இளையராஜாவின் குருவான ஜி.கே. வெங்கடேசிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு அவர், “நீ முதலில் படத்தை முடி. பிறகு இளையராஜாவிடம் பேசிக்கலாம்,” என்று ஊக்கமளித்தார்.

இதனால் உற்சாகமடைந்த ராஜ்கிரண், சுமார் நான்கு மாதங்களில் படப்பிடிப்பை முடித்தார். பின்னர் மீண்டும் இளையராஜாவை சந்தித்து, “படத்தை எடுத்துவிட்டேன், வந்து பாருங்கள்” என்று அழைத்தார்.

படத்தை பார்த்த இளையராஜா அதற்கு ஆச்சரியப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்,
“இந்த படத்தை பாவலர் கிரியேசன்ஸ் பேனரில் வெளியிடலாம். ஆனால் இதில் பாடல்கள் வேண்டாம்; பாடல்கள் இருந்தால் படத்தின் தரம் பாதிக்கலாம்,” என்று கருத்து தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இளையராஜாவின் இசையே படத்தின் ஆன்மா என்று நம்பியிருந்த ராஜ்கிரண், அந்த கருத்தை கேட்டபோது அதிர்ச்சியடைந்தாலும், இறுதியில் சில பாடல்களுடன் படம் வெளியானது.

“என் ராசாவின் மனசிலே” திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படம் ராஜ்கிரணை தயாரிப்பாளராக இருந்து முக்கிய நடிகராக மாற்றிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் ராஜ்கிரண் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், பின்னர் குணச்சித்திர நடிகராகவும் நடித்து தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பெற்றார். சமீபத்தில் அவர் தனுஷ் இயக்கிய “இட்லி கடை” திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ilayaraja said Donot play the hero The film in which Ramarajan refused to act Rajkiran life turned upside down


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->