'திமுக-வின் வெற்றி உறுதி'...! - அறிவாலயக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் துரைமுருகன் அதிரடிப் பேட்டி...!
DMK Victory Certain Minister Duraimurugan Gives Bold Interview Following Arivalayam Meeting
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முக்கிய அமைச்சர்களான கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொன்முடி எம்.எல்.ஏ-வும் பங்கேற்றுத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், உடல்நலக் குறைவு காரணமாகச் சில நாட்கள் ஓய்வில் இருந்த நான், தற்போது முழுமையாகக் குணமடைந்து மீண்டும் கட்சிப் பணிகளைத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக-வின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாகவும், மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.
English Summary
DMK Victory Certain Minister Duraimurugan Gives Bold Interview Following Arivalayam Meeting