சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு: ஓட்டெடுப்பும் புறக்கணிப்பு..! - Seithipunal
Seithipunal


சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அதற்காக நடந்த ஓட்டெடுப்பையும் புறக்கணித்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் உலக வங்கி மற்றும் ஐஎம்எப் அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் கடன் வழங்க திட்டமிட்டிருந்தது. குறித்த கடனை பாகிஸ்தானின் பொருளாதார சீர்திருத்த திட்டங்களுக்கு ஆதரவாக வழங்கப்பட இருந்தது. இந்நிலையில், இந்த கடனை வழங்குவுது குறித்து ஐஎம்எப் அமைப்பு இன்று ஆய்வு செய்ய இருந்தது.

ஆனால், இவ்வாறு சர்வதேச அமைப்புகளிடம் இருந்து பெறும் நிதியை பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு தான் செலவு செய்வதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்ததோடு, இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தை அணுகப் போவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நடந்த ஐஎம்எப் அமைப்பில் நடந்த ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. சர்வதேச நிதியத்திடம் இருந்து நீண்ட காலம் கடன் வாங்கும் பாகிஸ்தான், அதன் திட்டங்களை கடைபிடிப்பதிலும், நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்துவது இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானின் பொருளாதார நடவடிக்கைகளில் ராணுவத்தின் ஆதிக்கம் உள்ளதாகவும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருந்தும் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India opposes providing loans to Pakistan by the International Monetary Fund and boycotts the vote


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->