ஆபரேஷன் காலனேமி.. 82 போலி சாமியார்கள் கைது! - Seithipunal
Seithipunal


மதத் துறவியின் வேடத்தில் மக்களை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த உத்தரகாண்ட் அரசு  ‘ஆபரேஷன் காலனேமி’ திட்டத்தின் கீழ், தற்போது வரை 82 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தனியே கடந்த 2 நாட்களில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் துறவிகள் மற்றும் சாதுக்கள் என்ற பெயரில் திரிந்து, பக்தர்களை மற்றும் பொதுமக்களை ஏமாற்றியவர்கள் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மதத்தின் பெயரில் பொது நம்பிக்கையை சுரண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து வியாழக்கிழமை முதல் ‘ஆபரேஷன் காலனேமி’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது, மாநிலத்தில் சார்தாம் யாத்திரை மற்றும் கன்வர் யாத்திரை போன்ற புனித பயணங்கள் நடைபெறுவதால், பக்தர்கள் ஓட்டம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, போலி துறவிகள் மற்றும் ஆசாரியர்கள், இச்சூழ்நிலையை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் முயற்சிகள் அதிகரித்துள்ளன.

அதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ‘ஆபரேஷன் காலனேமி’ தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் துறவியின் வேடத்தில் திரியும் போலி ஆசாரியர்களை கண்டறிந்து வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Operation Kalanyemi 82 fake astrologers arrested


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->