கூலி படத்தின் டிரெய்லர் அப்டேட் கொடுத்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ்: ரசிகர்கள் உற்சாகம்..!
Director Lokesh Kanagaraj has given a trailer update for the film Coolie
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகப்பட்டுள்ள, இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்திலிருந்து 'சிக்கிட்டு' மற்றும் 'மோனிகா' என்ற பாடல்கள் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டிரெய்லர் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார். அதாவது, கூலி படத்தின் டிரெய்லர் வருகிற ஆகஸ்ட் மாதம் 02 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
English Summary
Director Lokesh Kanagaraj has given a trailer update for the film Coolie