பாராட்டுகள்! தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்த ‘லோகா’...! கல்யாணியின் நடிப்பு வைரல்...!
Congratulations Loka captivated both Tamil and Telugu fans Kalyanis performance goes viral
'பிரேமலு’ புகழ் நஸ்லேன் மற்றும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘லோகா’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிக் கொடி நாட்டி வருகிறது.

மேலும், டொமினிக் அருண் இயக்கிய இப்படத்தில், சந்து சலீம் குமார், அருண் குரியன்,சாண்டி, சாந்தி பாலசந்திரன் உள்ளிட்ட பலர் சிறப்பாக நடித்துள்ளனர். இது திரையரங்குகளில் வெளியானதுமே ரசிகர்கள் அதனை கைதட்டி வரவேற்றுள்ளனர்.
மேலும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களின் பாராட்டுகளை மழைபோல் பொழிந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்படுகிறது.
அதுமட்டுமின்றி,தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகியுள்ள இந்த படம், இரு மொழி ரசிகர்களிடையிலும் அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையடுத்து அதிக வரவேற்பின் பலனாக, ‘லோகா’ உலகளவில் ஏற்கனவே ரூ.40 கோடி வசூல் செய்துவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை தயாரித்த துல்கர் சல்மானை ரசிகர்கள் “மலையாள திரையுலகை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர்” எனக் கொண்டாடி வருகின்றனர். ‘லோகா’ திரைப்படம் மலையாள திரையுலகின் தரத்தை இன்னும் உயர்த்தியிருப்பதாக பாராட்டு குவிந்து வருகிறது.
English Summary
Congratulations Loka captivated both Tamil and Telugu fans Kalyanis performance goes viral