சமூக ஆர்வலர் அசோக்ராஜா புகார்..மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!
Social activist Ashokrajas complaint District Collector takes action
சமூக ஆர்வலர் அசோக்ராஜா புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான கோயில் இடம் புதுச்சேரியின் முக்கிய நகரப் பகுதியான தியாகு முதலியார் வீதியில் உள்ள நிலையில் அந்த இடத்தினை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க கோரப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிப்பதுடன் கூடிய விரைவில் மேஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அனுமதியுடன் அவ்விடத்தை காலி செய்து பழைய நிலைக்கு குறித்த தினத்திற்குள் கொண்டு வர அங்கிருந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்கள்.

இன்று நடைபெற்ற மக்கள் மன்ற கூட்டம்..31 புகார்களுக்கு உடனடியாக தீர்வு!
புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று நடைபெற்ற மக்கள் மன்ற கூட்டத்தில் 31 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
மூத்த அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டு 52-புகார்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து, அதில் 31புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 128 பொதுமக்கள் (19 மகளிர்) கலந்துகொண்டனர்.
பெரும்பாலான புகார்களுக்கு அந்த இடத்திலேயே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணத்தை உறுதி செய்தனர்.
நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக காவல் நிலைய அதிகாரிகளுக்கு (SHOS) மூத்த அதிகாரிகள் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

English Summary
Social activist Ashokrajas complaint District Collector takes action