'மக்களை ஏமாற்ற பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்': அண்ணாமலை ஆருடம்..!
Annamalai says Tamil Nadu people will decide the fate of DMK in the 2026 elections
மக்களை ஏமாற்ற பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழக மக்கள் அவர்களுக்கு முடிவு கட்டுவார்கள் என தமிழக முல்லா பாஜ தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
'இன்றைய தினம் மாலை, கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாபெரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் பங்கேற்று விநாயகர் அருளை பெற்றதில் மனம் நிறைந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
திமுக அரசு முருகன் மாநாடு நடத்தியபோது 21 தீர்மானங்களை நிறைவேற்றினார்கள் அதில் எட்டாவது தீர்மானத்தில், அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று கூறினார்கள்.

தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடம் முடிந்துவிட்டது, இதுவரை, ஒரு குழந்தையை கூட அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை. மக்களை ஏமாற்ற இதுபோன்ற பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.
சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள், காமாட்சிபுரம் ஆதினம் இரண்டாவது குரு மகா சன்னிதானம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர். என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Annamalai says Tamil Nadu people will decide the fate of DMK in the 2026 elections