ரகுல் பிரீத் சிங் கழுத்தில் மிஸ்டரி பேட்ச்...! ரசிகர்கள் ஆச்சரியம்... உண்மையில் அது என்ன?
Rakul Preet Singh mystery patch on her neck Fans are surprised What really
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங், தற்போது பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.அண்மையில் வெளியான “மேரி ஹஸ்பண்ட் கி பிவி” படத்தின் மூலம் அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

இதையடுத்து அஜய் தேவ்கன் நடித்திருக்கும் “தேதே பியார் தே 2” படத்திலும் ரகுல் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர். மாதவன் மற்றும் தபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே,ரகுல் பிரீத் சிங் குறித்து ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது மும்பை விமான நிலையத்தில் தோன்றிய அவர் கழுத்தில் ஒரு வித்தியாசமான பேட்ச் அணிந்திருப்பது கேமராவில் பதிவானது.அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதுடன், “அது என்ன?” என்று ரசிகர்கள் ஆவலுடன் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
அதன் பிறகு தெரிந்ததாவது, அது லைப்வேவ் எக்ஸ் 39 ஸ்டெம் செல் பேட்ச் என்பதாகும்.இதற்கும் பல ரசிகர்கள் இதன் பயன் தெரியாமல் முழிக்கின்றனர்.
English Summary
Rakul Preet Singh mystery patch on her neck Fans are surprised What really