மலையாள குடும்பத்துடன் டெல்லி முதல்வர் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்.!!
delhi cm celebrate onam festival in office
இந்தியாவில் கடந்த 26 ஆம் தேதி முதல் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதியுடன் பிரமாண்டமாக நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு தற்போது முதலே ஓணம் பண்டிகை விழா விடப்பட்ட வருகிறது.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், டெல்லியில் வசித்துவரும் மலையாள குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
அவர்களுடன் முதலமைச்சர் ரேகா குப்தாவும் கலந்துகொண்டு கேரளத்தின் பாரம்பரிய நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு முதலமைச்சர் ரேகா குப்தா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது;-
"ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும், ஏன்? உலகம் முழுவதும் கூட கொண்டாடப்படுகிறது. மலையாள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். டெல்லியில் 10 லட்சம் மலையாளக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களுக்கு ஓணம்பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
delhi cm celebrate onam festival in office